இந்தியா

தன்னுடைய கணவரை வேறொரு பெண்ணுக்கு விற்ற மனைவி! பேரம்பேசி கடைசியில் எவ்வளவுக்கு விற்றார் தெரியுமா?

Summary:

wife sales her husband


கர்நாடக மாநிலத்தில் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிந்த மனைவி, அவருக்கே கணவரை 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே தம்பதியினர் வாழ்ந்துவந்துள்ளனர். சில ஆண்டுகளாகவே அந்த பெண்ணின் கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, வேறு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்ததும் மனைவி அடிக்கடி சென்று அந்த பெண்ணை கண்டித்து வந்துள்ளார். மேலும் தன்னுடன் வந்துவிடுமாறு கணவரிடம் கெஞ்சியுள்ளார்.

இந்நிலையில் அந்த நபரின் உண்மையான மனைவிக்கு கடன் இருப்பதை அறிந்து கொண்ட அந்த பெண்,  அவரின் வீட்டிற்கு சென்று நான் உனக்கு தேவையான அளவு பணம் கொடுக்கிறேன், உன்னுடைய கணவரை எனக்கு விட்டுத் தருகிறாயா என்று கேட்டுள்ளார். இதனையடுத்து தன கணவனை விட்டுக்கொடுப்பதற்கு 17 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

 இறுதியில் பேரம் பேசி ஒருவழியாக ரூ.5 லட்சத்திற்கு பேரத்தை முடித்தனர். இதனையடுத்து கணவரை விற்ற மனைவி தான் கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement