கசந்த காதல்.. இன்சூரன்ஸ் பணத்துக்காக கள்ளக்காதலனுடன் கணவனுக்கு சமாதி கட்டிய மனைவி.!



Wife, Lover Allegedly Murder Husband for ₹20 Lakh Insurance Money in UP

கணவரின் இன்சூரன்ஸ் பணத்துக்காக காதல் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி குறித்த அம்பலமாகி இருக்கிறது. 

பள்ளி நடத்தி வந்தனர்: 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ள்ள மீரட் பகுதியில் வசித்து வருபவர் அதுல் பன்வார் (வயது 35). இவரின் மனைவி தாமினி. தம்பதிகள் கடந்த 2019ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் ஹஸ்தினாபுரில் வசித்து வந்த நிலையில், கிருஷ்ணா கிட்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளியையும் நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுமி கொலை.. தாய் & கள்ளக்காதலன் கைது..!

ஓட்டுனருடன் பழக்கம்: 

இந்நிலையில், பள்ளியில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்த துஷாருக்கும் - தாமினிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் பல நேரங்களில் தனிமையில் இருந்து வந்த நிலையில், கணவரை கொலை செய்து எல்.ஐ.சி இன்சூரன்ஸ் பணம் ரூ.20 லட்சத்தை எடுக்க கள்ளக்காதல் ஜோடி திட்டமிட்டுள்ளது. 

illegal affair

பாலில் தூக்க மாத்திரை: 

இவர்களின் திட்டப்படி அதுலுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்த நிலையில், துஷார், அவரின் கூட்டாளி சோனு, உதய் ஆகியோர் சேர்ந்து பாம்பை அதுலின் போர்வையில் விட்டு கடிக்க வைத்துள்ளனர். இதனால் அதுல உயிரிழந்த நிலையில், குடும்பத்தினர் படுக்கைக்கு எப்படி பாம்பு வந்தது என சந்தேகப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

குற்றவாளிகள் கைது: 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தாமினி, துஷார், சோனு, உதய்குமார் ஆகியோரை கைது செய்தனர். ஏற்கனவே உபி மாநிலத்தில் கள்ளகாதலுக்காக கணவர் / மனைவியை சுற்றுலா, தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்வது அதிகமாகி இருக்கிறது. இதுபோல பாம்பை கடிக்க விட்டும் பல கொலை சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பள்ளிப்பருவ காதலால் விபரீதம்.. கள்ளகாதலுக்காக கணவருக்கு மர்டர் ஸ்கெட்ச்.. தமிழக இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!