
wife locked door and commit suicide
நேபாளத்தை சேர்ந்த ராஜ் என்பவரும் ரூபா என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மும்பையில் வசித்துவந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராஜ் தனது வீட்டு குளியலறைக்குள் சென்றார். அப்போது அவரது மனைவி குளியலறை கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வீட்டிற்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குளியலறைக்குள் இருந்து வெகுநேரமாக ராஜ் கதவை தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து கொண்டு அவர் வெளியில் வந்துள்ளார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரூபா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர் எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், இது என்னுடைய தவறு தான் என எழுதியிருந்தது. ஆனால் ரூபாவின் சகோதரர் காவல்துறையில் அளித்த புகாரில், ராஜுக்கு திருமணத்துக்கு பின்னர் வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த ரூபா மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார் என கூறியிருந்தார். இதனையடுத்து ராஜூவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement