கணவனை கட்டிப்போட்டு கதறக்கதற நரகம் காண்பித்த மனைவி.. தாங்க முடியாமல் அலறித்துடித்த கணவன்.. பகீர் சம்பவம்.!



Wife Allegedly Ties Up Husband and Electroshocks Him After Drunken Fight in Uttar Pradesh

ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்த கணவரை, மனைவி மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சஞ்சீவ் திவாரி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இதனிடையே, குடிபோதைக்கு அடிமையான சஞ்சீவ் அவ்வப்போது போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. 

சண்டை:

சஞ்சீவின் மனைவிக்கும் போதைப்பழக்கம் உள்ளதாக தெரியவரும் நிலையில், சம்பவத்தன்று இதுதொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரை கட்டிலில் கட்டிப்போட்டு இரவு முழுவதும் சித்ரவதை செய்துள்ளார். மேலும், கொடூரமாக தாக்கி கரண்ட் ஷாக்கும் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கூலித்தொழிலாளிக்கு எமனான அந்த ஒரு விஷயம்.. கோயிலில் நடந்த கொடூர சம்பவம்.!

கொலை முயற்சி:

இதனால் தலையில் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு அலறித்துடித்த சஞ்சீவ் திவாரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் சென்ற அதிகாரிகள் சஞ்சீவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

உயிர்க்கு ஆபத்தான நிலையில் சஞ்சீவ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் மனைவி கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: காதல் திருமண விவகாரத்தில் சரமாரி தாக்குதல் பயங்கர சண்டை.. அலறிய பெண்.. பதறவைக்கும் வீடியோ & தாக்குதல் காட்சிகள்.!