பிரதமர் மோடியிடம் செம கேள்வி கேட்ட பள்ளி மாணவன்! மோடி அளித்த நச் பதில். வீடியோ.

பிரதமர் மோடியிடம் செம கேள்வி கேட்ட பள்ளி மாணவன்! மோடி அளித்த நச் பதில். வீடியோ.


Why president why not prime minister modi asked student

இன்று செம்ப்டம்பர் 7 இந்தியாவுக்கே ஒரு சோகமான தினம். பல ஆயிரம் கோடி செலவு செய்து, பல கஷ்டங்களை தாண்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ISRO கடந்த மாதம் அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தின் ஒருபகுதி பூமியுடனான தொடர்பை இழந்துள்ளது.

விக்ரம் லேண்டர் என்னும் பகுதி இன்று நிலவின் தென் திசையில் தரை இறங்குவதாக இருந்தது. உலகமே இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. விக்ரம் லேண்டர் நிலவின் அருகில் செல்லும்போது அதன் கட்டுப்பாட்டை இழந்து பூமியுடனான தொடர்பை இழந்தது.

modi

விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதை பார்க்க இந்திய பிரதமர் மோடி ISRO வின் தலைமை இடமான பெங்களூருவுக்கு வந்திருந்தார். மேலும், விண்வெளி வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற சில மாணவர்களும் லேண்டர் தரை இறங்குவதை பார்க்க வந்திருந்தனர்.

அப்போது அந்த மாணவர்களுடன் மோடி உரையாற்றினார். அப்போது அதில் ஒரு மாணவன் பிரதமர் மோடியிடம் நான் இந்தியாவின் குடியரசு தலைவராகவேண்டும், அதற்கு என்ன செய்யவேண்டும் என மோடியிடம் கேட்டார். அதற்கு மகிழ்ச்சியுடன் பதிலளித்த மோடி ஏன் குடியரசு தலைவர் ஆக வேண்டும்? பிரதமர் ஆக கூடாதா? என அந்த மாணவனை பார்த்து சிரித்து கொண்டே கேள்வி கேட்டார்.

பின்னர் அந்த மாணவனுக்கு தனது ஆட்டோகிராஃபை போட்டு கொடுத்தார் பிரதமர் மோடி.