பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை அனுமதிக்க மாட்டோம்! பிரதமர் மோடி அதிரடி!

பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை அனுமதிக்க மாட்டோம்! பிரதமர் மோடி அதிரடி!


water stopped to pakistan


ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அந்த மாநிலத்தின் சார்கி தாத்ரி என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசுகையில் கடந்த 70 ஆண்டுகளாக ஹரியானா விவசாயிகளுக்கான தண்ணீர், பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கிறது. இனி இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர், பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம். தடுத்து நிறுத்தப்படும் நீர், விவசாயிகளின் நிலங்களுக்கும் மக்களின் வீடுகளுக்கும் கொண்டு வரப்படும்.

modi

பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் மோடி கூறினார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் உலகம் முழுவதும் பல தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

முந்தைய அரசாங்கங்களால் மக்களுக்கு நன்மை எதுவும் நடக்கவில்லை. உங்களுக்காக நான் போராடுவேன். ஹரியானாவுக்கு சேவை செய்ய பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.