அடுத்தடுத்து அதிர்ச்சி! 2 மாதங்களில் 3 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு! கதற கதற தாய் கூறிய பகீர் குற்றச்சாட்டு..!!!



visakhapatnam-medical-students-suicide-case

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சின்னவால்டேர் பகுதியில் உள்ள விடுதி அறையில் ஷ்ரவாணி என்ற மாணவி நேற்று தூக்கிட்டு உயிரிழந்தார்.

விடுதி அறையில் மாணவி உயிரிழப்பு

விடுதி அறையில் ஷ்ரவாணி உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாடகை வீட்டில் 22 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு..! பின்னணி காரணம் என்ன? கதறும் பெற்றோர்கள்...!!!

தாயார் கூறிய அதிர்ச்சி குற்றச்சாட்டு

மாணவி ஷ்ரவாணியின் தாய் கண்ணீர் மல்க பேசியபோது, தனது மகள் கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே மகள் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராகிங், பணிச்சுமை குறித்து விசாரணை

ஒரே மருத்துவக் கல்லூரியில் குறுகிய காலத்தில் 3 முதுகலை மாணவர்கள் உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கல்லூரியில் நிலவும் பணிச்சுமை, மூத்த மாணவர்களின் துன்புறுத்தல் அல்லது ராகிங் உள்ளிட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் மாணவர்களின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிருமி! போலீஸ்கே ட்விஸ்ட் கொடுத்த நிதி பாண்டேயின் நாடகம்... வாரணாசி வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் ரகசியங்கள்..!!!