இந்தியா வீடியோ

தோளில் கணவனை சுமந்து நடக்க வைத்து, கம்பால் அடித்து கொடுமைப்படுத்திய கிராம மக்கள்! இதுதான் காரணமா? வெளியான பகீர் வீடியோ!

Summary:

Village people punishement to girl suspected as illegal affair

கணவன் தனது மனைவிக்கு தவறான உறவு இருப்பதாக சந்தேகப்பட்ட நிலையில், கிராம  மக்கள் அவருக்கு கொடூரமாக தண்டனை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டம், சபரி ரன்வாசா கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் குஜராத்தில் தினசரி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கணவருக்கு தனது மனைவி வேறொரு நபருடன் தகாத உறவில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய அவர் இந்த சந்தேகம் குறித்து தனது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு தண்டனை கொடுக்க எண்ணி, தனது கணவரை தோளில் சுமந்துகொண்டே நடக்க வைத்துள்ளனர். மேலும் பின்னாலேயே சென்று குச்சியால் அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த பெண் கணவரை தூக்கமுடியாமல் தடுமாறிய நிலையில் அவர்கள் மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில்,  இதனைக்கண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தாக்கப்பட்ட பெண்ணின் கணவன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement