இந்தியா மருத்துவம் Covid-19

கொரோனா காலத்தில் தங்களைக் காத்த மருத்துவருக்கு இந்த நிலைமையா.! ஒன்று திரண்டு உதவிய கிராம மக்கள்.! நெகிழ்ச்சி சம்பவம்.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் முன் கள வீரர்களாக நின்று பணியாற்றி வருகிறார்கள். பல மருத்துவர்கள் உயிர் தியாகமும் செய்துள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதை அறிந்து, ஒரு கிராமமே அவருக்கு உதவிய சம்பவம், ஆந்திராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கர் ராவ், கரஞ்சேடு ஆரம்பச் சுகாதார மையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமியும் மருத்துவராக உள்ளார். இவர்கள் இருவரம் கரஞ்சேடு கிராம மக்களுக்கு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கொரோனா சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதில் மனைவி பாக்கியலட்சுமி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் மருத்துவர் பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அதிக பாதிப்படைந்தைத் தொடர்ந்து விஜயவாடாவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாஸ்கர் ராவுக்கு அதிகமாக நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்கு 2 கோடி வரை செலவாகும் எனக் கூறியுள்ளனர். இதனால் மனைவி பாக்கியலட்சுமி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கணவரைக் காப்பாற்றுவதற்காக தெரிந்தவர்கள் மூலம் பணம் திரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த கரஞ்சேடு கிராம மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் பாஸ்கரின் நிலை அறிந்து, அவருக்கு உதவுவதற்காக ஒன்று கூடியுள்ளனர். கிராம மக்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தொகையை கொடுத்துள்ளனர். இந்தநிலையில் ரூ.20 லட்சம் அளவுக்கு நிதி திரட்டிய அவர்கள் அதனை பாக்யலட்சுமியிடம் ஒப்படைத்தது அவரை நெகிழ்வைத்தனர்.

மேலும். இது பற்றி அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மருத்துவர் பாஸ்கரின் சிகிச்சைக்கு ஆகும் செலவை ஆந்திர அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இதையடுத்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement