BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இது தீய சக்திகள் செயல்! கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் 'பத்து ரூபாய் பாலாஜி' என பேசியதும் வீசப்பட்ட செருப்பு! வைரலாகும் வீடியோ...
கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் பரபரப்பாக மாறி, உயிரிழப்புகளும் அரசியல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து கிளம்பி வருகின்றன. இந்த சம்பவம் தமிழக அரசியல் சூழ்நிலையை பெரிதும் பாதித்துள்ளது.
கூட்ட நெரிசலில் உயிரிழப்பு
தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது மற்றும் காத்திருந்த மக்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமை தான் இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.
அதிமுக குற்றச்சாட்டு
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோவை சத்யன், விஜய் 'பத்து ரூபாய் பாலாஜி' என பேசியதும், தயாராக இருந்த தீய சக்திகள் செருப்பு வீசித் தாக்கியது தான் கலவரத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய் "ஐயா அமைச்சரே..." என உரையாற்றத் தொடங்கியவுடன் செருப்பு வீசப்பட்டது என்றும், பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: என்னது... விஜய்யின் 5 மணி மாநாடு பேச்சுக்கு இதுதான் காரணமா? விஜய்- க்கு 6 மணிக்கு அப்புறம் இந்த வீக்கனஸ் இருக்கா!
பொதுமக்கள் குற்றச்சாட்டு
கூட்ட நெரிசலில் மக்கள் இறந்ததாக கூறப்படுவது உண்மையல்ல என்றும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும், ஜென்செட் உடைக்கப்பட்டதையும் பொதுமக்கள் சந்தேகத்துடன் குறிப்பிட்டுள்ளனர். அதன்பின் போலீசார் தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்ததாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிபிஐ விசாரணை கோரிக்கை
இச்சம்பவத்தில் உண்மையை மறைக்க திமுக அரசியல் நோக்கில் செயல்படுகிறது என அதிமுக குற்றம் சாட்ட, தவெக சிபிஐ விசாரணை கோரியுள்ளது. இந்த சம்பவம் உண்மையில் எப்படி நடந்தது என்பது குறித்து மக்கள் இடையே இன்னும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
கரூரில் நடந்த இந்த கலவரம், அரசியல் குற்றச்சாட்டுகளையும், விசாரணை கோரிக்கைகளையும் தீவிரப்படுத்தி, தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
செருப்பு வீசுற காட்சிக்கள் இடம் பெற்று உள்ளன. கண்டிப்பாக இது சமூக விரோதிக்கள் செய்யல் தான்
— Attacker TVK (@Ajay_fno) September 28, 2025
pic.twitter.com/b0iqKJNGUm
இதையும் படிங்க: நான்கு வருட காதல்! ஆனால் கல்யாணம் வேறொரு பெண்ணுடன்! காதலன் வீட்டிற்கு சென்று நொடியில் பெண் செய்த அதிர்ச்சி செயல்! பரபரப்பு வீடியோ...