இந்தியா

திருமணமான பெண்ணை வசியப்படுத்த இளைஞர் செய்த செயல்.! நள்ளிரவில் நடந்த சம்பவம்.!

Summary:

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவை அடுத்த குண்டல பள்ளி, ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்த முரளி என்ப

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவை அடுத்த குண்டல பள்ளி, ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்த முரளி என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் இரவில் சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்வதும். எதிர்முனையில் பேசுவது பெண்களாக இருந்தால் அவர்களிடம் குரல் நன்றாக உள்ளது என்று புகழ்வதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில், முரளி செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில், ராங்கால் மூலம் நல்கொண்டா மாவட்டம், குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பு கிடைத்துள்ளது. இவர் அந்த பெண்ணிடம் மூன்று மாதங்களாக செல்போனில் பேசி வந்த நிலையில், நான் மிகவும் அழகானவன் என அடிக்கடி கூறிவந்துள்ளார் முரளி. இதனையடுத்து இருவரும் நேரடியாக சந்திக்க முடிவு செய்துள்ளனர். 

அப்போது அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிந்த முரளி, அவரை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை வசியப்படுத்த திட்டமிட்டு, பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வசியப்படுத்துவது எப்படி? என்று வீடியோ பார்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று மனித எலும்புக்கூடுகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு இரவில்  பூஜை நடத்தி உள்ளார். இதனையடுத்து காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை பொருட்கள் இருப்பதை பார்த்து அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வசிய பூஜை பற்றிய தகவல்கள் அந்த கிராம வாசிகளுக்கு தெரியவந்ததையடுத்து  கிராம மக்களும்  அச்சம் அடைந்தனர். இதனையடுத்து கிராம மக்கள் மற்றும் அந்த பெண்ணுடன் சேர்ந்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். முரளி தான் அதை செய்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முரளியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். 


Advertisement