உச்சகட்ட பயங்கரம்.. பாலியல் மாத்திரை சாப்பிட்டு கல்லூரி மாணவியிடம் வெறிச்செயல்.. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மாணவி..!!



uttarpradesh-young-man-raped-a-college-girl

பாலியல் செயல்பாட்டினை அதிகரிக்க மாத்திரை சாப்பிட்டு கல்லூரி மாணவியை காமுகன் திட்டமிட்டு சீரழித்ததில், மாணவி கயவனின் கொடுமையால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, தனது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்ததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை கவனித்த ராஜகௌதம் என்ற 25 வயது இளைஞன், திடீரென வீட்டிற்குள் நுழைந்து மாணவியிடம் அத்துமீற முயற்சித்துள்ளான். மேலும் மாணவியின் குடும்பத்தினர் வெளியே செல்வதை கவனித்த அவன், முன்பாகவே பாலியல் ஊக்கமாத்திரையை சாப்பிட்டுள்ளான். 

இதனால் மாணவியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட இளைஞன் அவரை பாலியல் வன்கொடுமை செய்யவே, மாணவியின் பெண்ணுறுப்பில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பயந்துபோன இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளான். ரத்தப்போக்கு அதிகமான நிலையில், மாணவி துடிதுடித்து மயங்கி கிடந்திருக்கிறார். 

UttarPradesh

பின் வீட்டிற்கு வந்த மாணவியின் சகோதரி அவரைக்கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலிருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவ பரிசோதனையில், அந்த மாணவி முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், அதிக ரத்தப்போக்கினால் தான் மாணவி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி இந்தகொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகவுதமை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.