"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
19 வயது இளம்பெண் கொலை வழக்கில் பாஜக மூத்த தலைவரின் மகன் கைது; பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபட முயற்சித்த பயங்கரம்.!
விபச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுத்த ரிசார்ட் பெண் பணியாளர், உரிமையாளரான பாஜக பிரமுகரின் மகனால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான ரிஷிகேஷ் சொகுசு விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த இளம்பெண், அந்த விடுதிக்கு பின்னால் இருக்கும் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 18ஆம் தேதி முதல் சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதாகும் அங்கிதா பண்டரி வீட்டிற்கு திரும்பவில்லை என்று காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் ரிசார்ட் உரிமையாளர், மேலாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தனது ஆண் நண்பருடன் உரையாடிய ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் பெண் பணியாற்றி வரும் ரிசார்ட் உரிமையாளர் தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்ததை தெரிவித்துள்ளார்.
ரிசார்டுக்கு வரும் வி.ஐ.பி நபர்களுடன் உரிமையாளர் அங்கீதாவை படுக்கையை பகிர கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது ஆண் நண்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய பெண்மணி விபரத்தை தெரிவித்த நிலையில், சில மணிநேரத்திற்குள் அவரின் அலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது. மறுநாள் காலையில் பெண்ணுக்கு ஆண் நண்பர் தொடர்பு கொள்கையில், ரிசார்ட் உரிமையாளர் போனை எடுத்து பெண்மணி உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் பாஜக பிரமுகரின் மகன், விடுதி மேலாளர், உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மக்கள் பாஜகவினருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பாஜக தலைவருக்கு எதிரான போராட்டத்தில் குறித்த நிலையில் அந்த விடுதியில் சில பகுதிகளுக்கு தீயும் வைக்கப்பட்டது மேலும் பாஜக எம்எல்ஏவின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது மக்களின் போராட்டம் அதிகரித்து வருவதால் வழித்தாரியாவின் தந்தையான வினோத் யார் யாவை பாஜகவில் இருந்து நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது