புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வயிற்று வலியால் அலறிய பெண்.. மருத்துவமனையில் கண்ட காட்சி.. அதிர்ச்சியில் உறவினர்கள்.!
வயிற்று வலியால் துடித்த பெண் ஒருவருக்கு, அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது மருத்துவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பை கட்டி அகற்றல்
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் கிரண் நேகி என்ற பெண்ணுக்கு கருப்பையில் கட்டி இருந்துள்ளது. இதனை அகற்ற அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்தப் பெண்ணிற்கு திடீரென வயிற்றில் வலி எடுக்க ஆரம்பித்தது.
இதையும் படிங்க: நெஞ்சமெல்லாம் பதறுதே.. மின்சார கம்பியிலேயே கரிக்கட்டையான லைன் மேன்.. அலட்சியத்தால் விபரீதம்.!
பொறுக்க முடியாத வலி
ஒரு கட்டத்தில் அவருக்கு பொறுக்க முடியாத அளவிற்கு வயிற்று வலி கடுமையானது. இதனால், அவசர அவசரமாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அவரது வயிற்றில் பிளாஸ்டிக் குழாய் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.
இது மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அவருக்கு கருப்பைக் கட்டியை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.
சீரான உடல்நிலை
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அந்த 9 இன்ச் பிளாஸ்டிக் குழாயை பெண்ணின் வயிற்றிலிருந்து நீக்கி அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்த சிகிச்சைக்குப் பின் பெண்ணின் உடல்நிலை சீரானது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு முதல் முறை கருப்பை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி., சுவிங்கம்தானே என அலட்சியமா? பெற்றோர்களே கவனம்.!