"நான் செத்துட்டா என் புள்ள கேம் விளையாட மாட்டான்ல்ல?" தூக்கில் தொங்கிய தாய்.! கதறும் கணவன்.!



uttar pradesh mother suicide for son whom addicted to pubg mobile game

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியில் வசித்து வரும் ரவீந்திர பிரதாப் சிங் என்பவருக்கு ஷீலா சிங் என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். ரவீந்திர பிரதாப் சிங் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்பத்தில் மகன் மூலமாக பிரச்சனை ஏற்பட்டது. 

13 வயது மகன் அதிக நேரம் செல்போனில் பப்ஜ் கேம் விளையாடுவது மற்றும் தொலைக்காட்சியை பார்ப்பது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளான். இது மனைவி ஷீலா சிங்க்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது எதிர்காலம் குறித்து ஷீலா சிங் அடிக்கடி கவலை கொண்டு கணவனிடம் தெரிவித்து வந்துள்ளார்.

Uttar pradesh

மகனின் இந்த பழக்கத்தை மாற்ற அவர் எவ்வளவோ முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 11ஆம் தேதி இரவு 11 மணி அளவில் கணவரிடம் மிக வருத்தத்துடன் மகன் குறித்து பேசி உள்ளார். பின்னர், நள்ளிரவு 2 மணி அளவில் ரவீந்திர பிரதாப் கண் விழித்த போது அருகில் மனைவி இல்லை. எனவே அதிர்ச்சி அடைந்து அவர் வீட்டில் தேடிய போது வீட்டில் இருந்த பூஜை அறையில் ஷீலா சிங் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசின் முதற்கட்ட தகவலில் மகனின் எதிர்காலம் பற்றிய கவலையில்தான் ஷீலா சிங் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.