விசாரணைக்கு அழைத்துச்சென்று இலட்சக்கணக்கில் பேரம் பேசிய காவல்துறை; மர்ம மரணமடைந்த இளைஞர்.!uttar-pradesh-greater-noida-youth-died-in-police-statio

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். சம்பவத்தன்று யோகேஷை அங்குள்ள சிபியானா காவல் நிலைய அதிகாரிகள் சிறுமியை கடத்தி வந்ததாக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ந்துபோன அவரின் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் வழக்கு குறித்து கேட்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிப்பு

அதற்கு பதில் அளிக்க மறுத்த காவல் துறையினர், காவல் நிலையம் வந்து பேசிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். பதறியபடி காவல் நிலையம் சென்றபோது வேண்டும் என்றே யோகேஷின் சகோதரர் மற்றும் உறவினர்களை அலைக்கழித்த அதிகாரிகள், இறுதியில் யோகேஷ் தற்கொலை செய்துகொண்டதாக கூறி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: ஆன்லைன் பந்தயத்தில் முதலீடு செய்து, ரூ.2 கோடி கடனாளியான மகன் அடித்தே கொலை; தந்தை அதிர்ச்சி செயல்.!

உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை

காவல் நிலையத்தில் யோகேஷ் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில், உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து தற்போது தகவல் காவல்துறையினரின் உயர் அதிகாரிகளுக்கு சென்று விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவரிடமும் விசாரிக்கப்படுகிறது. 

ரூ.5 இலட்சம் பணம் கேட்டு மிரட்டல்

முதற்கட்ட தகவலின்படி, காவல்துறையினர் யோகேஷின் சகோதரரிடம், யோகேஷை விடுவிக்க ரூ.5 இலட்சம் பணம் கேட்டுள்ளனர். முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் பணமும், மதுபானத்திற்கான பணத்தையும் யோகேஷின் சகோதரர் கொடுத்த நிலையில், ரூ.4.5 இலட்சம் தொகை காலையில் வேண்டும் என கூறியுள்ளனர்.

இதற்கிடையில் தான் யோகேஷின் மர்ம மரணம் அடைந்துள்ளது. தற்போது சம்பவம் தொடர்பாக சியானா காவல் நிலைய அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி.. தாய், மனைவி, 3 குழந்தைகள் கொலை.. அரக்கனின் அதிர்ச்சி செயல்.!