காலையிலேயே அதிர்ச்சி.. தாய், மனைவி, 3 குழந்தைகள் கொலை.. அரக்கனின் அதிர்ச்சி செயல்.!SHOCKING SCENE SPOTTED UP 42 YEARS MEN MURDER HIS FAMILY AND SUICIDE HIMSELF

உத்திரபிரதேசத்தில் மனப்பிரழ்வு கொண்ட ஒரு நபர் தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

மது போதைக்கு அடிமை

உத்திரபிரதேசத்தில் உள்ள பல்காபூர் கிராமத்தில் அனுராக் சிங் என்ற 42 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தாய், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தினர் அவரை போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்க்க முடிவெடுத்தனர். 

இதையும் படிங்க: கொள்ளை சம்பவத்தில் தொழிலதிபர் மரணம்; குற்றவாளியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.!

SHOCKING SCENE

தாய் சுட்டு கொலை

இதற்கு ஒப்புக்கொள்ளாத அனுராக் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது அடிக்கடி நடந்து வந்த நிலையில் இன்று காலையில் இது குறித்து தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அனுராக் தனது தாய் சாவித்திரியை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். 

தீராத ஆத்திரம் : 

தொடர்ந்து மனைவி பிரியங்காவை சுத்தியால் அடித்து கொன்றுள்ளார். அப்போதும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. எனவே தனது 6, 9 மற்றும் 12 வயது கொண்ட 3 குழந்தைகளையும் வீட்டின் மாடியில் இருந்து தூக்கி கீழே வீசி கொண்டுள்ளார். அதன் பின்னர் பயத்தில் அனுராக்சிங் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து கொண்டுள்ளார். 

மது போதையால் குடும்பமே மரணம்

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இது பற்றி பல்காபூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதைக்கு அடிமையான நபரால் ஒரு குடும்பமே அழிந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 2 ஆண் நண்பர்களுடன் தனிமையில் உல்லாசம்; நேரில் சென்று வெளுத்தெடுத்த கணவன்.. காவல்துறை வைத்த ட்விஸ்ட்.!