பிட்புல் பயங்கரங்கள்.. 82 வயது மூதாட்டியை கடித்து குதறி கொலை செய்த நாயை தத்தெடுக்க ஆர்வம்..!uttar-pradesh-dog-killed-82-aged-lady

மூதாட்டியை கடித்து கொலை செய்த நாயை பலரும் தத்தெடுக்க முன் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கைசர்பாக் பகுதியில் வசித்து வருபவர் சுசீலா திரிபாதி (வயது 82). இவரின் மகன் அப்பகுதியில் ஜும் பயிற்சியாளராக இருக்கிறார். இவர்களின் வீட்டில் கடந்த மூன்று வருடமாக பிட்புல் ரக நாய் வளர்ந்து வந்துள்ளது.

கடந்த வாரத்தில் காலை 6 மணியளவில் மூதாட்டி சுசிலாவை நாய் கடித்துக் கொன்றுள்ளது. சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகன், தாயார் சரிந்து கிடப்பதை கண்டமாக அதிர்ச்சி அடைந்த நிலையில், அவரை மீட்டு பலராம்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். 

Uttar pradesh

அதிக இரத்தம் வெளியேறிய காரணத்தால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூதாட்டி சுசிலா பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து முதல் வயிறு வரை மொத்தம் 12 இடங்களில் நாய் கடித்ததால் ஏற்பட்ட கடுமையான காயத்தால் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, மூதாட்டியை கொலை செய்த நாயை லக்னோ மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றுள்ளனர். இந்த சூழலில் மாநகராட்சி வசம் உள்ள பிட்புல் நாயை தத்தெடுக்க பெங்களூர், டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த தொன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளனர்.