4 பேர் கும்பலால் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. பெண்ணின் கால்களை உடைத்து சித்ரவதை.. நெஞ்சை ரணமாக்கும் துயரம்.!

4 பேர் கும்பலால் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. பெண்ணின் கால்களை உடைத்து சித்ரவதை.. நெஞ்சை ரணமாக்கும் துயரம்.!


uttar-pradesh-27-aged-woman-gang-raped-police-investiga

காமவெறி கும்பலால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அவரின் கால்கள் சிகிச்சையின் போது துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்து இளைஞன் உதவி செய்வான் என்று நம்பி சென்றதற்கு நடந்த பெருந்துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம், கோசிகளா கிராமத்தில் 30 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வங்கிக்கு சென்று பணம் எடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல வாகனத்திற்கு காத்திருந்துள்ளார். அப்போது, இவரின் கிராமத்தை சேர்ந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் வருகை தந்துள்ளார். 

அவர் பெண்ணை கிராமத்தில் கொண்டு சென்று விடுவதாக தெரிவிக்க, பெண் நான் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். பின்னர், இளைஞர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெண்மணி இருசக்கர வாகனத்தில் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார். பெண்ணை வாகனத்தில் ஏற்றி இளைஞன் கிராமத்தை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்துள்ளார்.

Uttar pradesh

வழியில் இளைஞனின் நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விசயத்திற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட அந்த காம இளைஞனும் பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான். 

இதோடு பெண்ணை விட்டுவிடாமல் அவரின் கால்களில் இருசக்கர வாகனத்தை ஏற்றி கால்களை உடைத்துள்ளனர். இறுதியில் பெண்ணுக்கு போதை கலந்த மதுவை ஊற்றிவிட்டு மயக்க நிலையில் மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அனைவரும் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பெண்மணி உதவிக்காக அலறியுள்ளார். 

சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பெண்ணின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி காம இளைஞர்களை கைது செய்தனர். சிகிச்சையின் போது பெண்ணுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளது.