கழிவறைகளில் தமிழக அரசு சின்னம், மகாத்மா காந்தி; இந்த கொடுமை எங்கு தெரியுமா?

கழிவறைகளில் தமிழக அரசு சின்னம், மகாத்மா காந்தி; இந்த கொடுமை எங்கு தெரியுமா?



uthraprathesh toilet - tamilnadu logo - gandhi photo

பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாகா் மாவட்டத்தில் உள்ள இச்ஹாவரி கிராமத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. வெகு நாட்களுக்கு முன்பே கட்டப்பட்ட இந்தக் கழிவறைகள் யாரும் பயன்படுத்த நிலையில் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது.

இந்த கழிவறைகளின் உட்புற சுவற்றில் தமிழக அரசு சின்னம் மற்றும் மகாத்மா காந்தி புகைப்படம் இடம்பெற்ற டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



 

இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாாி, டைல்ஸ்கள் உள்ளூரில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 13 கழிவறைகள் இதுபோன்ற டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தொிகிறது. இது தொடர்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பகுதி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.