திருமணம் தடைபட்டதால் லெஸ்பியன் தோழி கழுத்தறுத்து கொலை; 24 வயது இளம்பெண் வெறிச்செயல்.!UP Same Relationship Girl Killed 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் பகுதியை சேர்ந்த பெண்மணி பிரீத்தி (வயது 24), இவரின் தோழி பிரியா (வயது 30). பிரீத்தியின் தாயார் ஊர்மிளா. 

பிரீத்தி மற்றும் பிரியா ஆகியோர் தோழிகளாக இருந்து வந்த நிலையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாக மலர்ந்து, தன்பாலின சேர்கையாக தொடர்ந்துள்ளது. 

இதனையடுத்து, ஓரினசேர்க்கை காதலர்கள் பல இடங்களுக்கு சென்று உள்ளாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில், இவர்களின் காதல் விபரம் ஊராருக்கு தெரியவந்துள்ளது. இதனால் பிரீத்திக்கு திருமணத்திக்கு வரன் அமையவில்லை.

Latest news

இதனால் பிரியாவை கொலை செய்ய திட்டமிட்ட பிரீத்தி, அவரை ஆணாக மாற மூளைச்சலவை செய்துள்ளார். பிரியாவை கொலை செய்ய மந்திரவாதிக்கு ரூ.1 இலட்சம் பணம் கொடுத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மந்திரவாதி மந்திரம் சொல்லியே உன்னை ஆணாக மாற்றிடுவார், நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என ஆசையாக பிரீத்தி கூறுவதை கேட்டு பிரியா மந்திரவாதியிடம் சென்றபோது, அவர் பிரியாவை கொலை செய்து இருக்கிறார். 

இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் பிரீத்தி, அவரின் தாயார், மந்திரவாதி ஆகியோரை கைது செய்துள்ளனர்.