பார்க்கும்போதே மனசு பதறுது!! போனில் பேசியபடி பைக்கில் சென்ற நபர் கழிவுநீர்த் தொட்டியில் தலைகுப்புற விழுந்த காட்சி.. வைரல் வீடியோ..

செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் சென்றவர் கழிவுநீர் தொட்டியில் தலைகுப்புற விழுந்த வீடியோ காட்சி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோ காட்சியில், நபர் ஒருவர் தனது இருசக்கர வானகத்தில் போனில் பேசியபடி சென்றுகொண்டிருக்கிறார். அவர் செல்லும் வழியில் கழிவுநீர் செல்வதற்கான தொட்டி கட்டப்பட்டுக்கொண்டிருந்தது.
அந்த இடம் சமமாக இல்லாததால், பைக்கை ஓட்டிச்சென்ற நபர் நிலைதடுமாறி கழிவுநீர் தொட்டிக்குள் தலைகுப்புற விழுகிறார். இதனை பார்த்த அங்கிருந்த சிலர் ஓடிவந்து அந்த நபரை கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.