ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது? உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!

ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது? உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!


up cm talk about state name change

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பாக அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்று அங்குள்ள ஷா அலி பந்தா திடலில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாங்கள் வெற்றி பெற்றால் ஐதராபாத்தை பாக்யநகர் என மாற்றுவோம். ஐதராபாத்தை பாக்யநகர் என்று பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் ஏன் மாற்றக் கூடாது என்று கூறினேன். பாஜக ஆட்சிக்கு வந்தபின் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றினோம். பிறகு ஏன் ஐதராபாத்தை பாக்யநகராக மாற்ற முடியாது?  என்று கூறினார்.

up cm

டிசம்பர் ஒன்றாம் தேதி ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அதன் முடிவுகள் 4 ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே 2018ல் நடைபெற்ற தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய யோகி ஆதித்யநாத், ஐதராபாத் பாக்யநகராக பெயர் மாற்றம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.