இந்தியா லைப் ஸ்டைல்

இரண்டு இளம் பெண்களுக்கு ஒரே நேரத்தில் தாலி கட்டிய இளைஞர்..! அடம்பிடித்ததால் வந்த வினை.!

Summary:

UP boy married two girls at same time video goes viral

ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் காதலித்து வந்த நிலையில், இரண்டு பெண்களையும் அந்த இளைஞர் தாலி கட்டி தனது மனைவியாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்துவந்துள்ளார். இளைஞர் மற்றொரு பெண்ணை காதலிப்பது தெரியாத அந்த பெண்கள் தனது காதலன் மீது உயிராக இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் ஒருநாள் இருவருக்கும் தெரியவந்துள்ளது.

இருவருமே அந்த இளைஞரிடம் சென்று நீ என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என முறையிட்டுள்ளனர். இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற காதலன், இறுதியில் கோவில் முன்பாக வைத்து இருவருக்குமே அடுத்தடுத்து தாலி கட்டி மனைவிகளாக்கி சமாதானம் செய்துள்ளார்.

அந்த இளைஞரின் குடும்பத்தினர் உட்பட இரண்டு பெண்களின் உறவினர்களும் இந்த திருமணதிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கும் தாலி கட்டிய அந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement