இந்தியா

கீழே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்! திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் பரபரப்பு!

Summary:

unmaned flight accident

கார்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் இன்று ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) சார்பில் பெயரிடப்படாத ஆளில்லா ரஸ்டம்-2 விமானம் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் பொது இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. 

அப்போது, ஆராய்ச்சி மையத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், சித்ரதுர்கா மாவட்டத்தின் ஜோடி சிக்கனா ஹல்லி பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. ஆளில்லா உளவு விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்துக்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். இந்த விபத்து காலை 6 மணிக்கு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானம் கீழே விழுந்து நொறுங்கியபோது பயங்கர சத்தம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அதிச்சியடைந்தனர். மேலும், விமானம் விவசாய நிலத்தில் விழுந்ததால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்திற்கு டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் விரைந்துள்ளனர். 


Advertisement