குறித்த தேதியில் திருமணம் நடக்கனும்... காலில் கட்டுடன் திருமணம் செய்த மாப்பிள்ளை... நடந்தது என்ன‌.!



Udaipur married with his fractured leg

கடந்த சிவராத்திரி அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த ராகுல் கட்டாரியா என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு ராகுலுக்கு விபத்து ஏற்ப்பட்டது.

அந்த விபத்தில் ராகுலுக்கு காலில் எழும்பு முறிவு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக ராகுல் அகமதாபாத் அழைத்து செல்லப்பட்டார்‌‌. அங்கு அவருக்கு காலில் பிளேட் வைத்து ஆப்ரேஷன் செய்யப்பட்டது. டாக்டர் ராகுலை பெட்டில் படுத்த படுக்கையாக இருக்க வேண்டும் கால்களை அசைக்க கூடாது என சொல்லிவிட்டார்.

Udaipur

இதனால் ராகுலின் குடும்பத்தினர் என்ன செய்வது என்ற தெரியாமல் குழப்பத்தில் இருந்த நிலையில் பெண் வீட்டார் பார்த்து கொள்ளலாம் திருமணம் குறித்த தேதியில் நடத்தி விடலாம் என ஆறுதல் கூறியுள்ளனர். அதனையடுத்து ராகுல் திருமண நாள் அன்று ஆம்புலன்ஸில் வந்து மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.