கொரோனா வைரஸ் எதிரொலி..! டெல்லியில் உபேர் கால் டாக்ஸி சேவை நிறுத்தம்..!

கொரோனா வைரஸ் எதிரொலி..! டெல்லியில் உபேர் கால் டாக்ஸி சேவை நிறுத்தம்..!



Uber call taxi service stopped at Delhi

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அசுருதலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகளவில் இந்த வைரஸ் தாக்குதலால் 14 ,000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வ்ரும் மார்ச் 31 வரை ரயில் சேவை நிறுத்தம், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, வணிக வளாகங்கள் மூட உத்தரவு, பல மாநிலங்களில் 31 வரை ஊரடங்கு உத்தரவு போன்றவை பிறப்பிக்கப்பட்டுள்ளன.

corono

இந்நிலையில், டெல்லி மாநிலம் முழுவதும் கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக வரும் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி தனியார் கால் டாக்சி நிறுவனங்களில் ஒன்றான உபேர் நிறுவனம் டெல்லி நகரில் தனது கால் டாக்ஸி சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.