இந்தியா

இரவு நேரம்.. காரில் இருந்து இறங்கிய 2 இளம் பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..

Summary:

இரவு நேரம்.. காரில் இருந்து இறங்கிய 2 இளம் பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..

 காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களை மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது டெல்லியில் நடந்துள்ளது. இரவு நேரத்தி பெண்கள் இருவர் காரில் வந்துகொண்டிருந்தநிலையில், தங்கள் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கினர். அப்போது அங்குவந்த ஆண்கள் சிலர் காரில் வந்த இளம் பெண் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதை அடுத்து, பின்னர் அந்த பெண்ணை தாக்க தொடங்கினர்.

இந்நிலையில் மற்றொரு பெண் காரில் இருந்து கீழே இறங்கிய பிறகு, கையில் இரும்பு கம்பியுடன் ஓடிவந்த சிலர் அந்த இரண்டு பெண்களையும் மிக கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிஉள்ளநிலைநிலையில், இந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement