அரை நிர்வாணமாக சாலையில் அடித்து விரட்டப்பட்ட இரு நபர்கள்.! ஏன் இந்த தண்டனை?? வைரலாகும் ஷாக் வீடியோ!!

அரை நிர்வாணமாக சாலையில் அடித்து விரட்டப்பட்ட இரு நபர்கள்.! ஏன் இந்த தண்டனை?? வைரலாகும் ஷாக் வீடியோ!!


two-person-attacked-by-people-foe-sold-beef

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்றதாக இரு நபர்கள் அரை நிர்வாணமாக அடித்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 50 வயதுமிக்க நரசிங் ரோஹிதாஸ் மற்றும் 52 வயது மதிப்புதக்க ராம்நிவாஸ் மெஹர் இருவரும் பெரிய வெள்ளை சாக்குடன் சென்றுள்ளனர். சாக்கை கண்டு சந்தேகமடைந்த கும்பல் ஒன்று அதுகுறித்து அவர்களிடம் விசாரித்துள்ளனர். சாக்கில் அவர்கள் மாட்டிறைச்சி இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் அதில் ஏறக்குறைய 33 கிலோ மாட்டிறைச்சி இருந்ததாக கூறப்படுகிறது. . இதனை கேட்டு அங்கிருந்த கும்பல் ஒன்று அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த நபர்களின் சட்டை கழட்டப்பட்டு, பெல்டால் அடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கூட்டத்தினரிடம் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை மீட்டு கைது செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டிறைச்சி கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.