கொரோனா குமார்..! கொரோனா குமாரி..! ஆந்திராவில் பிறந்த ஆண், பெண் குழந்தைக்கு பெயர் வைத்த பெற்றோர்.!Two newborns named Corona Kumar and Corona Kumari in Andhra

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் அதே நேரத்தில், பிறந்த குழந்தைகளுக்கு மக்கள் கொரோனா என பெயர்வைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துவருகிறது.

சமீபத்தில் சட்டிஸ்கர் மாநிலத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் கொரோனா, கோவிட் என பெயர் வைக்க, அந்த தகவல் உலகம் முழுவதும் தீயாக பரவியது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு மீண்டும் வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர் அவரது பெற்றோர்.

corono

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள வேம்பள்ளி மண்டலத்தில் இருக்கும் தாலப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா. அதேபோல் அபிரெட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ரமா தேவி. இவர்கள் இருவரையும் பிரசவத்திற்காக ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா குமார் என்றும், ரமாதேவிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்றும் பெற்றோர்கள் பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்த தகவல் மீண்டும் சமூக வலைத்தளங்களால் வைரலாகிவருகிறது.