இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை! மருத்துவரின் விளக்கம்!

இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை! மருத்துவரின் விளக்கம்!


two head and three hands for new born child


மத்திய பிரதேசத்தின் விடிஷா நகரை சேர்ந்த பபிதா என்ற பெண்ணிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பபிதா தன்னுடைய முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தநிலையில், பிரசவத்தின்போது பபிதாவிற்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் இரட்டையர்கள் ஒட்டிப்பிறந்துள்ளனர். பிரசவம் முடிந்தநிலையில், தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். 

new born

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், விடிஷாவில் இது போன்று பிறப்பது இதுதான் முதல்முறை. பெண்ணின் வயிற்றில் உள்ள கரு சரியாக உருவாகாதபோதுதான் இது நிகழ்கிறது. இந்த நிலை ஒரு மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.