பெங்களூருக்கு வர்றேன்.. ஜல்சா பண்ணனுமா? புக்கிங் பண்ணுங்க.! ஹைடெக் விபச்சார ஐ.டி-க்கள் அலப்பறை.! காவல்துறை ஆக்சன் என்ன?..!



Twitter Account Hitech Prostitution

இந்தியாவில் ஹைடெக் விபச்சாரம் என்பது சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. விடுதிகள், வாடிக்கையாளர்களின் வீடுகள், அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர்கள் என பல இடங்களில் பெண்கள் வரவழைக்கப்பட்டு விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. பாலியல் தொழில் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத செயலாகும். 

அவ்வாறு அரசின் சட்டதிட்டங்களை மீறி பாலியல் தொழிலில் ஈடுபடுவது மற்றும் அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு, அவ்வாறான செயலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்றளவில் மேலைநாட்டு கலாச்சார ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியதால், மனைவிகளை மாற்றும் கும்பல் தொடர்பான தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

காவல் துறையினர் விபச்சார தொழிலினை ஒழிக்க பல முயற்சிகள் எடுத்தாலும், இணையதள பயன்பாடுகள் மூலமாக அது நடக்கிறது. மேலும், போலியான கணக்குகள் வாயிலாக பெண்களின் விபரம் மற்றும் ஆபாச காட்சிகள் பகிரப்பட்டு ஆட்கள் ஈர்ப்பு நடவடிக்கையும் அரங்கேறி வருகின்றன. 

India

இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் செயல்பட்டு வரும் பெண்ணின் பெயரிலான கணக்கில், அவர் செல்லும் இடங்களை குறிப்பிட்டு என்னை சந்திக்க முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று ஹைடெக் விபச்சாரம் நடக்கிறது. இந்த குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கு பல்வேறு ஆபாச ஐ.டிக்களுடன் தொடர்பில் இருக்கிறது. இவர் தற்போது பெங்களூர் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னை சந்திக்க வேண்டும் என்றால் பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் நோக்கம் சல்லாப எண்ணம் கொண்ட செல்வம் மிக்க நபர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, பணம் பறிப்பது. இவர்களின் புகைப்படத்தை நம்பி யாரேனும் சென்று உல்லாசமாக இருந்தால், அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கவும் வாய்ப்புள்ளது. இல்லையேல் ரெய்டில் சிக்கி அவமானப்பட நேரிடும்.. உஷார்.

India

இது பெங்களூர் மட்டுமல்லாது இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறுகிறது ஏன், தமிழ் பெண்கள் பெயரிலேயே பல ஆபாச கணக்கு ஐ.டிக்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் செயல்பட்டு வருகின்றன. அதனை இயக்குவோரை அதிகாரிகள் கைது செய்தால் மட்டுமே, இனிவரும் காலங்களில் சிறார்கள் ஆபாச படம் பார்க்கும் செயலை தவிர்க்கலாம். ஏனெனில், ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் ஒவ்வொருவரின் கையிலும் செல்போன் உள்ளது. அது நல்லதை கற்றுக்கொள்ளவும், தீயதை மின்னல் வேகத்தில் அறியவும் உபயோகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுநலன் கருதி ஆபாச கணக்குகளின் விபரங்கள் புகைப்படத்தில் மறைக்கப்பட்டுள்ளன.