#வீடியோ: தாயின் கருவறைக்குள் இரட்டை குழந்தைகள் எப்படி அமர்ந்திருக்கு பாருங்க.. வைரல் வீடியோ இதோ..

#வீடியோ: தாயின் கருவறைக்குள் இரட்டை குழந்தைகள் எப்படி அமர்ந்திருக்கு பாருங்க.. வைரல் வீடியோ இதோ..


Twin babies in mother womb cute video

தாயின் கருவறைக்குள் இரட்டை குழந்தைகள் அழகாக அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒரு பெண் கருவுறும்போது போது, ஆண்களிடம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரு விந்து செல் மட்டும் பெண்ணின்  கருப்பையில் உள்ள அண்டத்துடன் இணைந்து கருமுட்டையை மாறுகிறது. இந்த கருமுட்டையானது மொருலா என அழைக்கப்படுகிறது.

இந்த மெருளாவில்தான் குழந்தையின் உடல் வளர்ச்சிபெற தொடங்குகிறது. ஒருவேளை, மெருளா அதன் வளர்ச்சிக்கு முன்பாகவே இரண்டாகப் பிரிந்தால், பிரிந்த இரண்டு மொருலாக்களும் இரண்டு குழந்தைகளின் உடலாக, தனித்தனியே வளர்ச்சிபெறத் தொடங்குகிறது. இப்படித்தான் இரட்டை குழந்தை பிறக்கிறது.

இந்நிலையில் பெண் ஒருவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் வீடியோவில், இரண்டு குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்க, அதில் ஒருகுழந்தை மற்றொரு குழந்தையை காலால் உதைப்பதுபோன்றும், அந்த குழந்தை சற்று தள்ளிப்போவது போன்றும், அவை சண்டையிடுவதுபோன்ற காட்சி ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.