மக்களின் மனதில் பயத்தை உருவாக்க முயற்சி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் பகீர் திட்டம்..!

மக்களின் மனதில் பயத்தை உருவாக்க முயற்சி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் பகீர் திட்டம்..!



Trying to create fear in people's minds

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்த 93 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

புதுடெல்லி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்னும் இஸ்லாமிய மத அமைப்பு கேரளாவில் 2006-ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையிடம் டெல்லியில் இருக்கிறது. 

இந்நிலையில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி கொடுப்பது, பயங்கரவாத செயலுக்கு பயிற்சியளிப்பது, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உட்பட பலதரப்பட்ட புகார்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது எழுந்தன. 

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத்துறை போன்ற பல்வேறு அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள், 2020-ஆம் வருடம் டெல்லி கலவரம், ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைக்கு எதிரான போராட்டங்கள்.

மேலும் பல சம்பவங்களுக்கு இந்த அமைப்பு நிதிஉதவி கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தபட்டு வருகிறது.

இதையடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் காவல் துறை, மாநில காவல் துறை பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா உட்பட நாட்டின் 15 மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. 

என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள், பணம், சர்ச்சைக்குரிய ஆவணங்கள், செல்போன்கள், லேப்டாப்கள், டிஜிட்டல் சாதனங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சோதனையால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பல்வேறு அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 

இதையடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான இடங்களில் நடந்த சோதனை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிற மதம் சார்ந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை  கொலை செய்வது, கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டியது போன்ற வன்முறை செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளது. 

பிரபலமான நபர்கள், இடங்கள் மீது தாக்குதல் நடந்துவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு ஆதரவு, பொதுச்சொத்தை அழித்தல் போன்றவை பயங்கரவாத தாக்குதலால் மக்கள் மனதில் பயத்தை உருவாக்க இந்த அமைப்பு முயற்சித்துள்ளது. என என்.ஐ.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.