சொந்த பேத்தியை சீரழித்து கொன்ற தாத்தா.. நெஞ்சை திடுக்கிடவைக்கும் துயரம்.!



Tripura Horror: 70-Year-Old Man Arrested for Assault and Murder of Granddaughter

தனது பராமரிப்பில் இருந்து வந்த பேத்தியை தாத்தா பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம் நடுநடுங்க வைத்துள்ளது. 

Minor Girl Assaulted and Murdered: திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா பகுதியில் வசித்து வரும் நபருக்கு திருமணம் முடிந்து பெண் குழந்தை, மனைவி இருந்துள்ளனர். இவர்களில் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தியதால், அந்த நபர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தற்போது பெங்களூரில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

சமாளித்த முதியவர்:

இந்த நபர் தனது மகளை, தனது சொந்த தந்தையின் பராமரிப்பில் அகர்தலாவில் விட்டுவிட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார். இதனிடையே, தற்போது 16 வயதாகும் சிறுமி தாத்தாவின் பராமரிப்பில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தந்தையிடம் பேசவில்லை. மகளை கேட்கும்போதெல்லாம் எதோ ஒரு காரணம் சொல்லி முதியவர் சமாளித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: பிரிந்து சென்ற மனைவி மகிழ்ச்சியாக இருந்ததால் கொடூர கொலை.. சைக்கோ கணவன் வெறிச்செயல்..!

sexual abuse

அம்பலமான உண்மை:

இதனால் சந்தேகமடைந்த நபர் வீட்டுக்கு வந்தபோது மகள் இல்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, 70 வயதுடைய நபரான பிரான் பல்லப் தாஸ் தனது சொந்த பேத்தியை வன்கொடுமை செய்து கொலை செய்தது அம்பலமானது. சிறுமியின் சடலத்தையும் புதைத்து இருக்கிறார்.

தண்டனை உறுதி:

இதனையடுத்து, சிறுமியின் சடலத்தை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நெஞ்செல்லாம் பதறுதே.. உடலில் காயங்கள்., ரத்தக்கறையுடன் வீடு திரும்பிய 7 வயது சிறுமி.. தின்பண்டம் ஆசை காட்டி இளைஞர் செய்த கொடூரம்.!