அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
திருச்சியில் அதிர்ச்சி... சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்.!! பிசியோதெரபிஸ்ட் கைது.!!
சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக தென்காசியை சேர்ந்த பிசியோதெரபி நிபுணர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியின் தென்னூர் பகுதியில் பிசியோதெரபி சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த காதர் பாவா என்பவர் இதனை நடத்தி வருகிறார். இந்நிலையில் உறையூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக காதர் பாவாவின் பிசியோதெரபி மையத்திற்கு வந்திருக்கிறார்.

அப்போது காலில் ஏற்பட்ட சுளுக்கை சரி செய்வது போல் காதர் பாவா அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஓடி வந்த பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டனர். மேலும் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காதர் பாவாவை பிடித்து தென்னூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமி கட்டாய திருமணம்... பாலியல் தொல்லை.!! 47 வயது நபர் மீது போக்சோ வழக்கு.!!
இதனைத் தொடர்ந்து காதர் பாவாவை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்சி பகுதியில் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: உபி - யில் பயங்கரம்... விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.!! இளைஞர்களுக்கு தர்ம அடி.!!