அப்போது ட்ரெண்ட் #இந்தி தெரியாது போடா..! இந்தி காதல் பாடல்களை ராகத்தோடு பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய திருச்சி சிவா.!

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்தின் பதவிக் கா


trichy-mp-siva-singing-hindi-song

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா டெல்லியிலுள்ள தனது வீட்டில் விருந்து அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் பங்கேற்றவர்களை குஷிப்படுத்தும் விதமாக இசை கச்சேரி நடத்திய திருச்சி சிவா, தனது பேச்சால் பார்வையாளர்களை மயக்குவார் என எதிர்பார்த்த போது இந்தி பாடலை பாடி பார்வையாளர்களை திகைக்கவைத்தார். "கபி கபி தில்லு மே" என்ற இந்தி பாடலில் துவங்கி, பல காதல் இந்திப் பாடல்களை பாடியுள்ளார். 

குலாம் நபி ஆசாத் மற்றும் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் திருச்சி சிவாவை பாராட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸ்களை பெற்றது. அதேவேளையில் பல நெகட்டிவ் கருத்துக்களும் குவிந்து வருகிறது.

அதற்க்கு காரணம் முன்னதாக, மத்திய அரசு இந்தியை திணிக்க நினைக்கிறது என்று கூறி, "இந்தி தெரியாது போடா" என்று சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த இசைக்கச்சேரி குறித்து நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.