"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
பச்சை குத்த ஆசையா?: மொதல்ல இதை படிங்க!,. மலிவு விலையில் பச்சை குத்திய 14 பேருக்கு நிகழ்ந்த சோகம்..!
உத்தர பிரதேச மாநிலம், பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் மற்றும் நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உட்பட 14 பேர் குறைந்த விலையில் பச்சை குத்தி கொண்டதில் அவர்கள் அனைவருக்கும் எச்.ஐ.வி (எய்ட்ஸ்) தொற்று ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பச்சை குத்திய அவர்களுக்கு முதற்கட்டமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அந்த காய்ச்சல் நீடித்து வந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்களுக்கு மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த பயனும் இல்லை. மேலும் அவர்களுக்கு காய்ச்சல் குறையவே இல்லை.
இதன் காரணமாக அவர்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் தொற்று இருப்பது அனைவருக்கும் உறுதியானது. இவர்களில் யாருக்கும் பாலியல் ரீதியிலான தொடர்பினாலோ அல்லது தொற்று ஏற்பட்டவரின் ரத்தம் வழியேவோ பாதிப்பு ஏற்படவில்லை.
சமீபத்தில் அவர்கள் அனைவரும் பச்சை குத்தி கொண்டனர் என்பதே அவர்களுக்கு இடையேயான பொதுவாக நடந்த விஷயம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு பச்சை குத்திய நபர், ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்தி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பச்சை குத்தும் ஊசியின் விலை அதிகம் என்பதால், பணத்தை மிச்சப்பட ஒரே ஊசியை பயன்படுத்தியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.