இந்தியா

ஏசி வெடித்து 2 சிறார்கள் உட்பட குடும்பத்தினர் 4 பேர் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.. மக்களே உஷார்.!!

Summary:

ஏசி வெடித்து 2 சிறார்கள் உட்பட குடும்பத்தினர் 4 பேர் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.. மக்களே உஷார்.!!

திடீரென ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டம், மாரியம்மனஹள்ளி கிராமத்தில் நேற்று இரவு 12 மணி அளவில் திடீரென ஒரு வீட்டில் ஏசி வெடித்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட அவர்களது 2 குழந்தைகள் என நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அவர்களால் வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏசி வென்ட்டிலிருந்து வாயு கசிந்ததால் மின்கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வீடு முழுவதும் தீயில் எரிந்ததால்  குடும்பத்தினர் உள்ளேயே சிக்கிக் கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்கள் வெங்கட் பிரசாந்த் (வயது 42). அவரது மனைவி சந்திரகலா (வயது 38). தம்பதிகளின் மகன் ஆத்விக்(6) மற்றும் மகள் பிரேரனா(8) ஆகிய நால்வரும் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர்.

அத்துடன் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் மிகவும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது விபத்தா? அல்லது கொலை முயற்சியா? என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement