இந்தியா

டிக் டாக் சாகசம்..! தண்ணீர் என நினைத்து கீழே குதித்த இளைஞர்.! நொடியில் நிகழ்ந்த சோகம்..! வைரல் வீடியோ.

Summary:

Tik tok

உத்திர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது நிரம்பிய ராஜா என்ற இளைஞர். இவருக்கு டிக்டாக் வீடியோகளை பார்ப்பது மற்றும் அவரில் வீடியோக்களை வெளியிடுவது மிகவும் பிடிக்கும்.

இதுவரை பல வீடியோகளை பதிவிட்டு அந்த வீடியோகளுக்கு பல லட்ச லைக்குகளும் குவிந்துள்ளன. இந்நிலையில் ஒரு நாள் ராஜா தன் நண்பர்களுடன் கங்கா கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கிருந்து டிக்டாக் செய்யலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது.

தனது நண்பர்களிடம் போனை கொடுத்து வீடியோ எடுக்க சொல்லிய ராஜா கால்வாயில் மேல்பகுதியிலிருந்து தலைகீழாக குதித்துள்ளார். ஆனால் அவர் குதித்த பகுதியில் அதிகப்படியான பாறைகள் இருந்த பகுதி என்பதால் பாறையில் தலை அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தற்போது அவர் குதித்த போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.Advertisement