செம போதை!! சரக்கு பாட்டிலுடன் பாடம் எடுத்த பெண் ஆசிரியை!! வைரல் வீடியோ..
அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மது போதையில் பாடம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமாபூர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கங்கா லெட்சுமால் என்ற பெண் ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்தார். கங்கா லெட்சுமால் மதுவுக்கு அடிமையானவர் என கூறப்படும்நிலையில், இவர் பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்தியபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.
பள்ளி ஆசிரியை மது அருந்தியபடி பாடம் எடுப்பதை கவனித்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாத கங்கா லெட்சுமால் தொடர்ந்து மது அருந்தியபடியே மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியவரவே, பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், கங்கா லக்ஷ்மம்மாவின் வகுப்பறைக்கு சென்ற அவர்கள், வகுப்பறையில் சோதனை செய்தபோது அவரது மேசை டிராயரில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் கங்கா லெட்சுமால் குடிபோதையில் பாடம் நடத்திக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து கங்கா லெட்சுமாலை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். பள்ளி ஆசிரியை ஒருவர் மதுபோதையில் பாடம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.