அரசு பள்ளியில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒரே மாதிரியான சீருடை.! கேரள அரசுப்பள்ளி அசத்தல்.!

அரசு பள்ளியில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒரே மாதிரியான சீருடை.! கேரள அரசுப்பள்ளி அசத்தல்.!



the-same-uniform-for-men-and-women-in-kerala-govt-schoo

கேரளாவில் அரசு பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஆண், பெண் இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி சீருடையில் பாலின பாகுபாட்டை அகற்றும் விதமாக மாணவர்களுக்கு பாலின பாகுபாடற்ற சீருடையை அறிமுகப்படுத்தி உள்ளது.

கேரளமாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின், பாலுசேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் இந்த பாலின பாகுபாடற்ற சீருடை செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 200 மாணவிகள் ஆண்களை போல மேல் சட்டையும், பேண்டும் அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர். 

இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வர் கூறுகையில், சீருடை மாற்றம் குறித்து பணியாளர் கவுன்சில் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த சீருடை மாற்றம் மாணவிகளுக்கு சவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்ள இந்த உடை மாணவிகளுக்கு ஏதுவாக அமையும் என்று கூறியுள்ளார். இதனை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.