ஆந்திராவில் தலைமை காவலர் எடுத்த விபரீத முடிவு..மன உளைச்சல் தான் காரணமா..சோகத்தில் உறவினர்கள்.!

ஆந்திராவில் தலைமை காவலர் எடுத்த விபரீத முடிவு..மன உளைச்சல் தான் காரணமா..சோகத்தில் உறவினர்கள்.!



the-perverse-decision-taken-by-the-chief-constable-in-a

ஆந்திரா மாநிலம் கடப்பா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவர் அதே பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல வெங்கட்டேஷ்வரலு வேலை முடிந்து இரவு வீடு திரும்பி இருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தோடு கூடிய அலறல் சத்தம் கேட்டுள்ளது. 

Chief constable

இதனையடுத்து  துப்பாக்கி சத்தம் கேட்டு  பதறிய அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினர்க்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்ததில் வெங்கடேஷ்வரலு அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஸ்வரலு தன் மனைவி மற்றும் மகள்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.மேலும் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணத்தை வெங்கடேஸ்வரலு கடிதத்தில் எழுதி வைத்திருப்பதாகவும் காவல்துறையினர் அதனை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.