மகளை ஆணவ கொலை செய்த பெற்றோர்... காதல் விவகாரத்தால் நேர்ந்த கொடூரம்...!

மகளை ஆணவ கொலை செய்த பெற்றோர்... காதல் விவகாரத்தால் நேர்ந்த கொடூரம்...!


The parents who murdered their daughter... the cruelty caused by the love affair...

காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவியை ஆணவ கொலை செய்து உடலை எரித்த தந்தை, அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தில் வசிப்பவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). ஹோமியோபதி மருத்துவம் (பி.எச்.எம்.எஸ்.) மூன்றாவது வருடம் படித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

சுபாங்கி வேறு ஒருவரை காதலித்தால், அவரது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையிடம், வேறு ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் சுபாங்கிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றது. திருமணம் நின்றதால் சுபாங்கியின் குடும்பத்தினருக்கு அவர் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. 

இந்நிலையில்  திடீரென சுபாங்கி காணாமல் போனார். சந்தேகமடைந்த சிலர் அவர் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சுபாங்கியின் குடும்பத்தாரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், காதல் விவகாரத்தால் திருமணம் நின்று போனதால் அந்த பெண் மீது அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். 

கடந்த மாதம் 22-ஆம் தேதி இரவு சுபங்கியை அவரது தந்தை ஜனார்தன், அண்ணன் கேசவ், மாமா கிரிதர் ஆகியோர் வயலுக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளனர். 
பின்னர் உடலை எரித்து அங்குள்ள கால்வாயில் சாம்பலை கரைத்தது தெரிவந்தது. 

இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த லிம்காவ் காவல்துறையினர் அந்த பெண்னின் தந்தை, அண்ணன், மாமா மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ணா, கோவிந்த் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் மகளை ஆணவ கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.