அயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் புத்தகத்தை கிழித்த வழக்கறிஞர்! அதிருப்தி அடைந்த நீதிபதிகள்!

அயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் புத்தகத்தை கிழித்த வழக்கறிஞர்! அதிருப்தி அடைந்த நீதிபதிகள்!



The lawyer who tore the book in court

அயோத்தி வழக்கில், இன்று  மாலை 5 மணியுடன் வாதங்கள் நிறைவு பெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  குழு, பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்தது.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில், இந்து அமைப்புகள் தரப்பில் வாதங்கள் முடிந்து புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோபமடைந்து அந்த புத்தகத்தை கிழித்துள்ளார்.

supreme court

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இவ்வாறு நடந்து கொண்டால் நாங்கள் எழுந்து சென்று விடுவோம். இப்படி நடப்பது நீதிமன்றத்தின் நேரம் வீணாகுமே தவிர, பலன் எதுவும் ஏற்படாது என கண்டித்தனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் கோரப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி இந்த வழக்கு மாலை 5 மணிக்கு முடிவடையும். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்றார்.