மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரியை சரமாரியாக தாக்கிய சட்டவிரோத கும்பல்..!!

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரியை சரமாரியாக தாக்கிய சட்டவிரோத கும்பல்..!!



The illegal gang attacked the female officer who came to stop sand smuggling..

பீகார் மாநிலத்தில், மணல் கடத்தல்காரர்களால் பெண் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகே இருக்கும் பிஹ்தா   பகுதிகளில் சட்ட விரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்ய சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு நடத்த சென்றார். இரு ஆய்வாளர்கள் அவருடன் சென்றனர். 

இந்நிலையில் மணல் குவாரியில் பல லாரிகள் வரிசையாக மணலுடன் நின்று கொண்டிருந்தன. பெண் அதிகாரி வந்ததை பார்த்த சட்ட விரோத கும்பல், அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவரை தரதரவென இழுத்துசென்று சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும் அவர் மீது கற்களை விசீனர். 

அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் இதை படம் பிடித்துள்ளார். இந்த தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய வழக்கில் காவல்துறையினர் 44 பேரை கைது செய்தனர். மூன்று பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் கைது செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பாட்னா காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், மணல் குவாரியை ஆய்வு செய்ய சென்ற மாவட்ட சுரங்க அதிகரியை சமூக விரோத கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. 

இது தொடர்பாக 44 பேரை கைது செய்துள்ளோம். மேலும் மாவட்ட சுரங்க அதிகாரி, அவருடன் சென்ற இரண்டு ஆய்வாளர்கள் என்று மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், பலரை தேடி வருகின்றனர்.