உருகி உருகி காதலித்த காதலி.. பெண் கேக்க சென்ற போது அடித்து துரத்தி அவமானப்படுத்தியதால் காதலன் எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பு சம்பவம்.!

உருகி உருகி காதலித்த காதலி.. பெண் கேக்க சென்ற போது அடித்து துரத்தி அவமானப்படுத்தியதால் காதலன் எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பு சம்பவம்.!


The girlfriend who fell in love with Uruki Uruki.. When the girl went to ask, the boyfriend took a tragic decision because he beat her and humiliated her.. Sensational incident.!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஆனைக்கல் கல்லுபாலு பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஹெம்மிகேபுரவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணை ராகேஷ் திருமணம் செய்ய முடிவு செய்து அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் ராகேஷை அடித்து துரத்தி அவமானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

love failure

மேலும் அந்த இளம் பெண்ணும் தனது பெற்றோரின் முடிவுதான் தன் முடிவும் என்று கூறி காதலை முறித்துள்ளார். இதனால் மனம் உடைந்து போன ராகேஷ் தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 இந்நிலையில் ராஜேஷின் பெற்றோர் தனது மகன் இறப்பிற்கு அவரது காதலி மற்றும் குடும்பத்தார் தான் காரணம் என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ராகேஷின் காதலி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.