கடும் மழையால் சாலைகள் துண்டிப்பு: குழந்தையின் சடலத்தை கைகளில் ஏந்தி மலையேறிய தந்தை..!

கடும் மழையால் சாலைகள் துண்டிப்பு: குழந்தையின் சடலத்தை கைகளில் ஏந்தி மலையேறிய தந்தை..!



The father carried the child's corpse in his arms and climbed the mountain

கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில் உள்ள முருகலா என்கிற பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு சஜேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது. சஜேஸ்வரி பிறந்து 4 மாதங்களே நிறைவடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தங்களது குழந்தையை பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சில நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதன் பின்னர், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு குழந்தையின் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், தாடிக்கொம்பு என்ற பகுதி வரை மட்டுமே சாலை வசதி உள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர்களது முருகலா பழங்குடி கிராமத்திற்கு குழந்தையின் சடலத்தை ஐயப்பன் தனது கைகளில் ஏந்தியடி சென்றுள்ளார்.

அடர்ந்த காட்டு பாதையின் வழியாகவும், தொங்குபாலத்தின் மீதும் அவர் குழந்தையின் சடலத்தை கைகளில் ஏந்திச்செல்லும் காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.