கோயில் கலசத்தை திருடி விற்க முயன்ற போதை ஆசாமிகள் கைது.. குடிக்க பணம் இல்லாததால் நேர்ந்த பரிதாபம்..!!

கோயில் கலசத்தை திருடி விற்க முயன்ற போதை ஆசாமிகள் கைது.. குடிக்க பணம் இல்லாததால் நேர்ந்த பரிதாபம்..!!



The drug addicts who tried to steal and sell the temple urn were arrested.

குடிக்க பணமில்லாததால் கோயில் கலசத்தை திருடி, விற்பதற்காக மீன்பாடி வண்டியில் கொண்டு சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

புதுச்சேரி, கடந்த புதன்கிழமை கொசப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலின் கோபுரத்தின் மீது இருந்த கலசம் திடீரென காணாமல் போனது.  இது தொடர்பாக உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கோயில் இருக்கும் தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது நள்ளிரவு 1:30 மணியளவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் மீன்பாடி வண்டியில் கோயில் கோயில் கோபுர கலசத்தை திருடிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

விசாரணையில், முதலியார்பேட்டை, உடையார்தோப்பை சேர்ந்த சரவணன் என்ற விக்னேஷ் மற்றும் லெப்போர்த் தெருவை சேர்ந்த கார்த்திக் என்று தெரியவந்தது. இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் திருடிய கோயில் செம்பு கலசத்தையும் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் விசாரணையில் குடிப்பதற்கு பணம் இல்லாததால் கோயில் கலசத்தை திருடி விற்க முயன்றதாகவும், செம்பு உலோகத்தால் செய்யப்படும் கோயில் கலசங்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்பதால் அவற்றை திருடியதாகவும் கூறியுள்ளனர்.