ஆத்திரத்தில் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து சூட்கேசில் எடுத்துச் சென்ற மகள்..!! அதிர்ச்சி சம்பவம்...!!



The daughter who strangled her mother in rage and took her to the suitcase..

வயதான தாயை மகளே கழுத்தை நெறித்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து காவல் நிலையத்துக்கே கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சொனலி சென் (39). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் பீவா பாலு (70) உடன் வசித்து வந்தார்.
இவருக்கும் தாயார் பீவா பாலுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சண்டையின் போது அவரது தாயார் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செனாலி தனது தாயாருக்கு வலுக்கட்டாயமாக 20 தூக்க மாத்திரைகளை ஊட்டி விட்டுள்ளார்.

சிறிது நேரத்துக்கு பின்னர், அவரது தாய் வயிற்று வலியால் அலறித் துடித்துள்ளார். இதை பார்த்து மேலும் ​​ஆத்திரமடைந்த செனாலி அவரது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் சடலத்தை பெரிய சூட்கேசில் அடைத்து லேஅவுட் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் செனாலி மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக செனாலியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடற்கூராய்விற்கு பின்னரே எப்படி கொலை நடந்தது என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.